இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்.
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதில் சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பினும் அதனையும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பாடசாலை மாணவர்களின் புத்தகப்…

