இலங்கையில் சூடுபிடித்த பராசக்தி(தீ)

இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி திரைப்படத்தின் காட்சிகளை ரசிகர்கள் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து வெளியிட்டுள்ளார்கள். காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது

Read More

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு.

கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று(மார்ச் 7) இரவு டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டர் கேளிக்கை விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 12ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க…

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கித்தாரர்கள் மட்டக்குளியில் பொலிசாரால் சுட்டுக்கொலை.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று(வெப்ரவரி 21) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிசார், கைதுசெய்யப்பட்ட இரு துப்பாக்கிதாரிகளையும் அழைத்துச் சென்றபோது பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த…

Read More

மித்தெனிய முக்கொலை – கைதானவர்கள் குறித்து வௌியான தகவல்

மித்தெனியவில் அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனை சுட்டுக் கொண்ட கொலையாளிகள் பற்றிய மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த முக்கொலைகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மித்தெனிய பொலிஸ் பிரிவின் தெபொக்காவ பகுதியிலும், வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் அக்ரஹெர சந்தியிலும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடையவர்கள் என்றும், வலஸ்முல்ல மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில்…

Read More

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் சந்தேகநபர் இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று(வெப்ரவரி 19) காலை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி மொஹமட் அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் அடையாளம் காணப்பட்டு புத்தளம் பாலாவி பகுதியில் வேன் ஒன்றில் பயணிக்கும்போது விசேட அதிரடிப்படையினரால்(STF) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவை சேர்ந்தவர்…

Read More