மகா சிவராத்திரி “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது – ஜனாதிபதி

மகா சிவராத்திரி விரதம் உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானைப் பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. எனவே, மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்….

Read More

உலகம் போற்றும் மகா சிவராத்திரி தினம் இன்று

உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கமைய உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களிலும் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன

Read More

சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை அறிவிப்பு.

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக் மட்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள பாடசாலைகளில் 27ம் திகதி வழக்கம் போல் கல்விநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு ஆளுநர் அறிவிப்பு. விடுமுறை நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை தொடர்ந்துவரும் சனிக்கிழமை(மார்ச் 1) அன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More