இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது
மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இது மேற்கொள்ளப்பட்டது. டுபாய்க்கு செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயதுடையவர் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.