நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காதல், கவிதை என பெயர் சூட்டிய கமல்.
பாடலாசிரியர் சினேகன் – கன்னிகா தம்பதியினருக்கு கடந்த மாதம் 25-ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தங்களுடைய சமூகவலைத்தளத்தினூடாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். எப்பொழுதும் கமலை நலன்விரும்பியாக கருதும் சினேகன் தங்கள் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வாங்க கமலை நேற்று(வெப்ரவரி 14) குடும்பமாகச்சென்று சந்தித்திருந்தார். அப்பொழுது கமல் இவர்களின் இரு குழந்தைகளுக்கும் ‘காதல்’, ‘கவிதை’ எனக்பெயர் சூட்டி தங்க வளையல்களையும் பரிசளித்துள்ளார். இது குறித்து அவர்கள் இவ்வாறு தங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ”காதலர் தினத்தில் … எங்கள் தங்க…

