இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் பங்கேற்பு.
இந்திய கூடைப்பதாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணி பங்குபற்றுகிறது. இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து கழகங்கள் பங்குபற்றும் தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது….

