இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
அமைதியான தேர்தல் – பிமல் ரத்நாயக்க
முன்னொருபோதும் இல்லாதவாறு அமைதியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தன் குடும்பத்தினர் சகிதம் வாக்களிக்க வந்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கடந்த காலங்களை விட நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. தேர்தல் ஒன்று நடைபெறுகின்றதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் அந்தளவுக்கு அமைதியான தேர்தல் ஒன்றை நடத்திக்…

