இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு வேண்டாம் ; கோப்பாயில் அரங்கினை அமைக்க எனது காணியை நன்கொடையாக தருகிறேன் – கௌரி பொன்னையா
யாழ்ப்பாணத்துக்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக கொடுத்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பொன்னையா தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், யாழ். குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் என கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்கவுள்ளதாகவும் கேள்வியுற்றேன். இயற்கையை அழிக்காது, புராதன மரங்களை அழிக்காது,…

