இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
உலகையே உலுக்குமளவுக்குப் போராட்டம் நடத்துவோம்! – சுமந்திரன் எச்சரிக்கை
“வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே…

