கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி
இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் மீன் வளங்களைப் பேணும் வகையில் முகாமைத்துவம் செய்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதித்துள்ளது. சூரை மீன் பிடிக்கும் தொழிலானது இந்து சமுத்திர வலயத்தின் தேசிய பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, தொழில் உருவாக்கம் மற்றும் கடலோர சமூகத்தவர்களின் சமூக பொருளாதார உறுதிப்பாட்டுக்கு…