கொழும்பு, இலங்கை, ஜுன் 2026 – சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆகாயத்தாமரையை (ஜப்பான் ஜபர) பொறுப்புடன் நிர்வகிப்பதன் ஊடாக, அதனை ஒரு பெறுமதிமிக்க புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக நிலைநிறுத்துவதற்குச் சுறுசுறுப்புடன் பங்களித்து வருகின்றது. இதற்காக அமெரிக்காவின் Scott Dunn நிறுவனம் மற்றும் ‘Conservation Collective’ ஆகியன ஒன்றிணைந்து, இந்த ஆய்வு மற்றும் வேலைத்திட்டத் தொடருக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன. இலங்கை சுற்றுச்சூழல் நிதியம் (Lanka Environment Fund) இதன் உள்ளூர் பங்காளராகச் செயற்படுவதுடன், அவர்களின் வழிகாட்டலின் கீழ் ‘The…
ஹம்பேகமுவ மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளில் பாரிய கஞ்சா வேட்டை : 3 பேர் கைது!
ஹம்பேகமுவ – சிரிபுர வனப்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் ஒ்ன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு சந்தேகநபர்கள் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பில் சுமார் 12,580 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு, சான்றுகளாக மாதிரிகளை எடுக்கப்பட்ட பின்னர், தீ வைத்து அழிக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த, 51 மற்றும் 63 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.