A high-level fireside panel featuring Jeff Hoffman, Jeevan Gnanam, Yuen Wong, and the Deputy Minister of Tourism of Sri Lanka, moderated by Cherrie Chan, explored how travel innovation, entrepreneurship, and digital / AI infrastructure can help Sri Lanka compete more effectively on the global stage. Held under the theme “The Sri Lanka Destination Stack –…
கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வக் கற்பாறை
கண்டி மாவட்டத்தில் கலஹா, தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அபூர்வக் கற்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தித்வா சூறாவளியினால் குறித்த ஆலய வளாகத்தில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவினை தொடர்ந்து குறித்த கற்பாறை ஆலய வளாகத்திற்கு வந்துள்ளதாகவும், கற்பாறையின் ஒரு பகுதி நீல நிறத்தில் காட்சியளிப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய கலஹா பொலிஸார் கற்பாறைக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் இந்த கற்காறை தொடர்பில் அறிக்கையை வழங்க உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.