காதலனின் மரண செய்தி கேட்ட காதலி தற்கொலை

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More

ஸ்ரீ தலதா வழிபாடுகளுக்காக இராஜதந்திரிகள் ரயிலில் பயணம்

16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று  வெள்ளிக்கிழமை  (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும்  நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர். வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில்…

Read More

ரயிலில் மோதி காட்டு யானை பலி

கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது. சியம்பலங்காமுவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க யானை ரயிலில் மோதியதால் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யானையின் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்த நிலையில் மீகலேவா வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

காலியில் ஹோட்டலில் தாக்குதல் சம்பவம் – ஆறு பேர் மருத்துவமனையில்

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த குழுவினர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், உணவகத்தைச் சேர்ந்த…

Read More

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் நடைபெறும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பு மத சேவைகள் நடைபெறும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது. எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்த்த…

Read More

கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கஞ்சிபாணி இம்ரான்

போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, வனத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர், சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகைன்’ போதைப்பொரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில்…

Read More

பாம்பை விட்டு கணவரை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி

குடும்ப உறவுகளில் பரவி வரும் இருண்ட அடித்தளங்களை நினைவூட்டும் விதமாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தில் மற்றொரு கொடூரமான வாழ்க்கைத் துணை கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. அண்மையில் தனது கணவனை, மனைவி அவரின் சட்டத்திற்கு புறம்பான உறவில் இருந்த காதலனின் உதவியுடன் கொலை செய்து சிமெந்து நிரப்பப்பட்ட கொள்கலனில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீரட்டின் பஹ்சுமா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவியால் மர்மமான…

Read More

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கம்

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலக்கத்தினூடாக, கடல்சார் அவசர சூழ்நிலைகளில் பதிலளிக்கும் நேரத்தைக் குறைப்பதையும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் எதிர்ப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட…

Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்த அனைவரும் தமிழின துரோகிகள் – இளங்குமரன்

நாளைய தினம் (ஏப்ரல் 17ஆம் திகதி) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துச் சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். எங்களின் வெற்றியை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்….

Read More

பிள்ளையான் நாட்டிற்காகப் போராடிய உண்மையான தேசபக்தர் – உதயகம்மன்பில

தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இன்று நான் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு என் வாழ்நாளில் நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. நான் பிள்ளையானை ஒரு…

Read More