Hayleys Solar Introduces Exclusive Interest-Free Installment Plans for HNB Cardholders

Hayleys Solar, the renewable energy arm of Hayleys Fentons Limited, is offering exclusive interest-free installment plans for Hatton National Bank (HNB) credit cardholders, making solar energy more accessible and affordable. Under this limited-time offer, HNB credit cardholders can convert their solar purchases into interest-free installments of up to 60 months, providing a cost-effective path to…

Read More

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று (11) அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்றுள்ளார்.

Read More

பண்டிகை காலத்திற்காக விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக 500 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 40 தொடருந்து சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட தொடருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Read More

ஆற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேரத் (103984), பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்தை பெண்ணை காப்பாற்றியுள்ளார். இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் குறித்த அதிகாரிக்கு தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் உயிர் பிழைத்த இளம் பெண் கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதானவர் என தெரியவந்துள்ளது. அந்த இளம் பெண்…

Read More

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அந்த நாட்களில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும்…

Read More

திருகோணமலை அருள்மிகு பத்ரகாளி அம்பாள் ஆலய இரதோற்ஸவம்.

திருகோணமலையில் கம்பீரமும், அழகு நிறைந்தவளாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வழங்கும் பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஏப்ரல் 1ம் திகதி கொடியேற்றம் நிகழ்ந்து இன்று 10ம் திருவிழாவான இரதோற்ஸவம் இடம்பெறுகின்றது..அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தான பூஜை தம்பபூஜை இடம்பெற்று 6.15 மணிக்கு விசேட அலங்காரங்களுடன் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது. காலை 8 மணிக்கு அடியார்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் மேள, தாள மங்கள இசையுடன் சிற்ப சாஸ்திர விதிகளுக்கு அமையப் பெற்ற அழகிய சித்திர தேரில் விநாயகரும் முருகனும்…

Read More

அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பூட்டு பலாலி – வசாவிளான் வீதி இன்று முதல் திறப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பலாலி – வசாவிளான் வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற இந்த வீதியே இவ்வாறு முழுமையாக இன்று(ஏப்ரல் 10) காலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பயணிகள் பேருந்துகள், பொதுமக்கள் என பலரும் மிகவும் மகிழ்ச்சியாக இந்த வீதியால் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது. இவ்விதியை அதிகாலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை குறித்த பாதையை…

Read More

யாழ் – பலாலி வீதி 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் திறப்பு

அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் இந்த வீதியில், பயணிக்கும் அனைவரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது. குறித்த வீதி, காலை 6 மணி முதல் மாலை 5 வரை மாத்திரம் போக்குவரத்திற்காக திறக்கப்படும்…

Read More

பண்டிகை காலத்தில் பாதுகாப்பு கடமையில் 35,000 பொலிஸார்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு பகுதியில் பாதுகாப்புக்காக போக்குவரத்து பொலிஸார் உட்பட சுமார் 6,000…

Read More

சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித் சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காவத்தமுனை பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More