The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
நிதி அறிக்கையிடல் சிறப்பிற்காக CA ஸ்ரீலங்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள் 2026இல் ஜனசக்தி லைஃப் தங்கம் வென்றது
நிதிச் சேவைகள் பிரிவில் நிறுவன நிர்வாக வெளிப்பாட்டில் சிறந்து விளங்கியமைக்காக கௌரவிக்கப்பட்டது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தக நாமமான ஜனசக்தி லைஃப், CA ஸ்ரீலங்காவால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள் 2025இல், காப்புறுதி பிரிவில் ரூ. 10 பில்லியன் வரையிலான மொத்த எழுத்துப் பிரீமியம் பதிவு செய்த நிறுவனங்களிடையே தங்க விருதைப் பெற்றது.
மேலும், நிதிச் சேவைகள் நிறுவன நிர்வாக வெளிப்பாட்டில் சிறந்து விளங்கியதற்காகவும் நிறுவனம் கௌரவிக்கப்பட்டது. இது ஒழுங்குமுறைகளை பின்பற்றல் மற்றும் பணிப்பாளர் சபை மட்ட கண்காணிப்பு ஆகியவற்றில் அது பின்பற்றும் உயர் தரங்களை வெளிப்படுத்துகிறது.
TAGS விருதுகளின் ‘வைர விழா’ அண்மையில் கொழும்பு Shangri-La ஹோட்டலில் நடைபெற்றது. இவ் விருதுகள், கடந்த ஆறு தசாப்தங்களாக இலங்கையில் நிறுவன அறிக்கையிடலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை கௌரவித்து வருகிறது. கொழும்பு பங்குச் சந்தையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் TAGS விருதுகள், வருடாந்த அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றிற்கான இலங்கையின் உயர்தர அளவுகோலாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
TAGS விருதுகள் (வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை) சர்வதேச அறிக்கையிடல் தரநிலைகளுடன் இணங்குகின்றன. ஜனசக்தி லைஃப் பெற்ற தங்க விருது, அதன் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் முறையில் செய்யப்பட்ட முக்கிய மேம்பாடுகளையும், இடர் மற்றும் மூலதன தொடர்பான வெளிப்படுத்தல்களின் வலுப்படுத்தலையும், நீண்டகால மதிப்பு உருவாக்கத்தை தெளிவாக எடுத்துரைக்கும் அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது. நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டறிக்கை, மூலோபாயம், இடர் முகாமைத்துவம் மற்றும் நிதி செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையேயான தெளிவான தொடர்பை வெளிப்படுத்தியது. அதனுடன், நிர்வாக மேற்பார்வை மற்றும் பணிப்பாளர் சபை குழுக்களின் செயல்திறன் குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட விளக்கம், தீர்வளிக்கும் திறன் மற்றும் மூலதன போதுமான நிலை குறித்த வெளிப்படையான அறிக்கை, செயல்பாட்டு தொடர்ச்சித்தன்மை மற்றும் நிலைத்தன்மை குறித்த தொலைநோக்குப் பார்வை, நீண்டகால மதிப்பு உருவாக்கம் குறித்த தெளிவான விளக்கம், பங்குதாரர்களை மையமாகக் கொண்ட மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் அணுகல் வசதிகள் ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன.
துறை சார்ந்த தரப்படுத்தல் மற்றும் எதிர்கால அறிக்கையிடல் தரநிலைகளை வலுப்படுத்த மதிப்பீட்டு அளவுகோல்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட ஆண்டில், ஜனசக்தி லைஃப்பால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அதன் சக நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் தெளிவு, பகுப்பாய்வுத் திறன் மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் தனித்து நின்றது.
இவ் விருதுகள், குறித்த நேரத்தில் அறிக்கையிடல் ஊடாக பங்குதாரர்களுடனான உறவை ஊக்குவிக்கின்றன. மேலும், நிதி மற்றும் நிதி சாராத தகவல்களை வெளிப்படையாக வழங்குவதையும் வலியுறுத்துகின்றன. சட்ட மற்றும் இலங்கை கணக்கியல் தரநிலைகளுக்கு இணக்கமாக செயல்படுவதையும், சர்வதேச அறிக்கையிடல் நடைமுறைகளை பின்பற்றுவதையும் இவை முன்னிறுத்துகின்றன.
இச் சாதனை குறித்து ஜனசக்தி லைஃப்பின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கூறுகையில், “ஆயுள் காப்புறுதித் துறையில் நம்பிக்கையே நிலையான மதிப்பு உருவாக்கத்தின் அடிப்படையாகும். TAGS விருதுகளின் 60ஆவது ஆண்டு நிறைவில் பெற்ற இத் தங்க விருது, ஜனசக்தி லைஃப்பின் அறிக்கையிடல் தரம் ஒழுங்குமுறை தேவைகளை மட்டுமன்றி அதற்கு மேற்பட்ட நிர்வாக ஒழுக்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துகிறது. காப்புறுதிதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளின் உயர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, வெளிப்படுத்தல் தரத்தையும் பொறுப்புக்கூறலையும் மேலும் மேம்படுத்தும் பணியில் நாம் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.
ஜனசக்தி லைஃப்பின் பிரதம நிதி அதிகாரி ஜூட் சண்முகம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “இவ்வாண்டு வலுப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்கள் ஒருங்கிணைந்த, எதிர்கால நோக்குடைய அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன. கடந்த ஆண்டில், துல்லியத்தையும் அணுகலையும் மேம்படுத்தும் நோக்கில் எங்கள் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் கட்டமைப்பை திட்டமிட்ட முறையில் மேம்படுத்தியுள்ளோம். மேலும் ஆபத்து வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தி முக்கிய அறிக்கையிடல் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளோம். மேம்படுத்தப்பட்டுள்ள TAGS மதிப்பீட்டு கட்டமைப்பு எதிர்கால நுண்ணறிவுகள் மற்றும் நிர்வாக தெளிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எமது பிரிவில் எங்கள் முயற்சிகள் மிக உயர் மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அறிக்கையிடல் சிறப்பை மேம்படுத்துவதில் ஜனசக்தி லைஃப் நிதிக் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.”என்றார்.
நிதி செயல்திறனை மட்டுமன்றி ஆண்டறிக்கைகள் பங்குதாரர்கள் தெளிவான மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் விதத்தையும் கருத்தில் கொண்டு TAGS விருதுகள் மதிப்பிடப்படுகின்றன. பட்டயக் கணக்காளர்கள் மற்றும் துறை நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழுவின் மூலம் பல கட்டங்களைக் கொண்ட விரிவான தொழில்நுட்ப மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
துறைசார் சிறப்புக்கும் நிர்வாக வெளிப்படுத்தலுக்கும் ஜனசக்தி லைஃப் பெற்றுள்ள இரட்டை அங்கீகாரம், காப்புறுதி துறையில் அதன் வலுவான நிர்வாக நடைமுறைகளை வெளிப்படுத்துகிறது. உள்ளக கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் நீண்டகால நிலைத்தன்மைக்கு நிறுவனம் அளிக்கும் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், ஜனசக்தி லைஃப் தனது அறிக்கையிடல் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் தொடர்ந்து இணைத்து வருகிறது. இதன் மூலம் மூலதன ஒழுக்கம், பங்குதாரர் நம்பிக்கை மற்றும் நிலையான வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துகிறது.
ஜனசக்தி லைஃப் பற்றி
1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.
