இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

வனவிலங்கு சேதத்தை குறைக்க அரசின் புதிய நடவடிக்கை
வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கவும், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் மேலாண்மைக்குத் தேவையான பரிந்துரைகளைப் பெறவும் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தக் குழுவின் தலைவராக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் டி. எஸ் ரத்னசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவிற்கு மேலும் 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.