கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
மோசமான வானிலையால் 4 மாவட்டங்களில் 716 பேர் பாதிப்பு
இலங்கையின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடும் வெப்ப நிலை காரணமாக 2 மாவட்டங்களில் 1282 குடும்பங்களைச் சேர்ந்த 3834 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்ட மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.