65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் பகுதியில் இசைக்கலைஞர் சடலம் மீட்பு.
புத்தளம், ஆராச்சிகட்டுவ பகுதியில் சிலாபம், மணக்குளம் பகுதியை சேர்ந்த பாடகரும் இசைக்கலைஞருமான 42 வயதான இந்திக ரொஷான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விஜயகுபாத பகுதியில் உள்ள ஒரு வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று(வெப்ரவரி 17) இரவு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன் , மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார்…

