யாழில் ஹெரோயினுடன் 06 பேர் அதிரடி கைது

தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என ராேஹித்த தெரிவிப்பு

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Read More

போலி சட்டத்தரணி மட்டக்களப்பில் அடையாளம் !

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (11) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது, கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மட்டக்களப்புப் பகுதியில் செயற்பட்டு வந்த ஒரு போலி ஆண் சட்டத்தரணி, கடந்த சனிக்கிழமை (08) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் ஆவார்.  கைது…

Read More

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

Read More

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது இப்பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலம் அமைப்பதற்காக இந்தச் சாலை மூடப்படுகிறது. அதன்படி, இன்று (14) முதல் ஜூன் 24 வரை, 10 நாட்களுக்கு சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை மூடப்பட்டிருக்கும் காலத்தில், வாகன ஓட்டிகள் நோர்டன் பிரிட்ஜ் சாலை மற்றும்…

Read More

கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு உல்ஹிடியாவ பகுதியில் நேற்று (13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வென்னப்புவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்டவர் 64 வயதுடைய மாரவில, மூதூகட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இத்தாலியில் வசித்து வருவதாகவும், கொல்லப்பட்டவர் அந்த…

Read More

இலங்கையில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை

இலங்கையில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், 180 அத்தியாவசிய மருந்துகள் இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், மருத்துவமனைகளுக்குள், சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரகம் தொடர்பான மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளன. புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும்…

Read More

காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும்…

Read More

இலங்கையில் முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு

இலங்கையில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்பத், தற்போதைய சந்தை விலைகளின் படி, ஒரு முகக் கவசம் 50 ரூபாவாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விலையை ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார். மூலப்பொருட்களின் விலை…

Read More

திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

பலாலி – தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தையிட்டி விகாரைக்கு அருகிலோ, அதன் நுழைவாயில், வீதியிலோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு…

Read More