“CSK vs SRH” போட்டியை காண வந்த AK மற்றும் SK

நேற்று (ஏப்ரல் 25) சென்னையில் நடந்த IPL 18வது சீஸனின் 43வது CSK vs SRH போட்டியை காண நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர். அஜித், ஷாலினி ஆகியோர் உடன் எடுத்த போட்டோக்களை சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அவை தற்பொழுது வைரலாகி வருகின்றன. நேற்றய போட்டியில் தோனியையும், அஜித்குமாரையும் கேமராமேன் மாரி மாரி காட்ட அரங்கமே அதிர்ந்தது.

Read More

14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் திகதி கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது…

Read More

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு – வௌியான தகவல்கள்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்…

Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி கிடையாது – ஜனாதிபதி

எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த…

Read More

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (25) பட்டிபொல பொலிஸ் பிரிவின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 63 வயதுடைய அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இந்த நபர் வேறொரு நபருடன் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததாகவும், மற்றொரு…

Read More

துணை சுகாதார பட்டதாரிகளுக்கு பொது அறிவு பரீட்சை!

பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு ஒரு சட்டவிரோத செயல் என்று அதன் அமைப்பின் செயலாளர் வைத்தியர் நிலான் பெர்னாண்டோ தெரிவித்தார். பரீட்சையில் கட்டாயம் பங்கேற்குமாறு இம்முறை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால், இணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.துணை சுகாதார பட்டதாரிகளுக்கு பொது அறிவு பரீட்சை? இருப்பினும்,…

Read More

சட்டவிரோத மதுபானத்துடன் மொனராகலையில் ஒருவர் கைது.

மொனராகலை – புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (ஏப்ரல் 24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு 10 லீட்டர் சட்ட விரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

Sri Lanka Insurance Corporation General Limited (SLICGL) Achieves Outstanding Financial Results for the Year 2024

Colombo 22nd April 2025: Sri Lanka Insurance Corporation General Limited (SLICGL) delivered an outstanding performance in 2024, reinforcing its strength and resilience in the industry as the market leader. The company posted a remarkable profit before taxation of Rs. 4 billion and a profit after tax of Rs. 3.3 billion, demonstrating solid financial stability. As…

Read More