உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் நடைபெறும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பு மத சேவைகள் நடைபெறும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது. எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்த்த…

Read More

கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கஞ்சிபாணி இம்ரான்

போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, வனத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர், சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகைன்’ போதைப்பொரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில்…

Read More

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டது

ஈரான் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஈரான் அணுகுண்டை உருவாக்கும் பணியைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார். ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால், அவர்கள் விரைவில் அதை சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஈரான் அணுகுண்டை உருவாக்க தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டது. மேலும், உலக சமூகம் அவர்களின் யுரேனிய செறிவூட்டலை அமைதியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்…

Read More

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கம்

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலக்கத்தினூடாக, கடல்சார் அவசர சூழ்நிலைகளில் பதிலளிக்கும் நேரத்தைக் குறைப்பதையும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் எதிர்ப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட…

Read More

2028 ஒலிம்பிக்கின் போது ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் போது தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. 128 வருட இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டதிலிருந்து, கிரிக்கெட்டின் ஒலிம்பிக் மறுபிரவேசம் குறித்த உற்சாகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் (ஐ.ஓ.சி) நிர்வாகக் குழு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டிற்கான வீரர் ஒதுக்கீடுகள் மற்றும் பங்கேற்கும்…

Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்த அனைவரும் தமிழின துரோகிகள் – இளங்குமரன்

நாளைய தினம் (ஏப்ரல் 17ஆம் திகதி) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துச் சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். எங்களின் வெற்றியை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்….

Read More

பிள்ளையான் நாட்டிற்காகப் போராடிய உண்மையான தேசபக்தர் – உதயகம்மன்பில

தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இன்று நான் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு என் வாழ்நாளில் நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. நான் பிள்ளையானை ஒரு…

Read More

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி யார்? விரைவில் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர பகுதியில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படுவார்கள் என்று கூறினார். “ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.” “பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் துறை…

Read More

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் முடிந்தாச்சு.

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை மிக கச்சிதமாக தொகுத்துவழங்கும் திறமையான தொகுப்பாளினியும், எப்போதும் துரு துரு என்றும் உறவு , நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவருமான பிரியங்கா தேஷ்பாண்டேக்கு கல்யாணம். வாழ்க்கையில் உண்மையான அன்புக்காக ஏங்கும் நபர் நான் என்று அடிக்கடி சொல்லுவதை நேர்காணலில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அவரின் அன்பை பெற்று அவர் ஏற்கும் அன்பைக்கொடுக்க மாப்பிள்ளை அமைந்தாச்சு. லண்டனில் வசித்துவரும் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் இறையருளோடு திருமணம் இன்று(ஏப்ரல் 16)…

Read More

நுவரெலியாவில் பேருந்து வசதியின்மையால் மக்கள் அவதி

நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லாததால் இன்று (15) பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு தொழில் நிமித்தம் வருபவர்கள் என பலரும் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். மேலும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக நுவரெலியாவிலிருந்து விசேட பேருந்து சேவையை இயக்கப்படுகின்ற போதிலும் நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லை என பயணிகள் குற்றம்…

Read More