உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட சிறப்பு அறிவிப்பு
பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கிரிப்டோகரன்சி வணிகங்களுக்கான விளம்பரங்கள் தவறானவை என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த மோசடி விளம்பரங்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் போலி விளம்பரங்களை ஊக்குவிப்பதற்குப் பின்னால் வெளிநாட்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் இந்த நாட்டில் பிரபலங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உடைப்பதே இதன் நோக்கம் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும்…