தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை பதிவான மிக உயர்ந்த மதிப்பை எட்டியுள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,100 டொலர்களை தாண்டியுள்ளது. நேற்று (31) 24 கெரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் விலை 3,128.06 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) அது மேலும் உயர்ந்து 3,137 டொலர்களாக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலை இவ்வாறு உயர்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த மற்றும் விதிக்க தயாராகும் சுங்க வரிகள் ஒரு கூடுதல்…

Read More

வேதன விடயத்தில் அரசாங்கம் இன்னும் அக்கறையுடன் செயற்ட்படவில்லை – ஜோசப் ஸ்டாலின்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர் வேதன முரண்பாட்டிற்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது எனச் சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின், ஆனாலும் இந்த விடயத்தில் அவர்கள் அக்கறையுடன்…

Read More

முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

பேராதனை, ஏதடுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (30) இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர வண்டி விளையாட்டு மைதானமொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்தவர்கள் போயகம மற்றும் ஹெந்தெனிய பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 53 வயதுடைய இருவர் ஆவர். சாரதியின் கட்டுப்பாட்டடை இழந்து முச்சக்கரவண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்தின் போது நான்கு பேர் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பின்…

Read More

அதிவேக வீதியில் விபத்து இருவர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read More

நாட்டை மீண்டும் ஊழல்வாதிகளிடம் கையளிக்க போவதில்லை – ஜனாதிபதி

ஊழல்வாதிகள் மீண்டும் நாட்டில் அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று புத்தல நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில், “முன்னதாக தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்குப் பணம் செலுத்த வேண்டும். வீதியை அமைப்பதற்குப் பணம் செலுத்தவேண்டிய நிலை காணப்பட்டது. இந்த அனைத்துச் செயற்பாடுகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும்…

Read More

புகையிரத சேவைகளில் தாமதம்

பிரதான தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து சேவைகளில் தாமதமாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்பொல பகுதியில் தொடருந்து ஒன்று இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தே இவ்வாறு இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே போக்குவரத்து தாமதமாகக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்று (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான கனமழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும்…

Read More

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் நிவாரண பொதிகள்

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதிகளை இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும். நாடு பூராகவுமுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம். 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களடங்கிய நிவாரணப் பொதியை 2,500 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய முடியும். இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நிவாரணப் பொதியை கொள்வனவு செய்ய முடியும் என அரசாங்கம் அண்மையில்…

Read More

நாட்டின் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (31) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேலும் விளக்கிய, வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ, “இந்த நிலைமை…

Read More

தேசபந்துவிற்கு எதிரான பிரேரணை சட்ட விரோதமானது – விஜயதாச ராஜபக்ஷ

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, சட்டத்துக்கு முரணானது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசபந்து தென்னகோன் காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டமை செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு இன்னும் அமுலில் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு அமுலில் இருக்கையில், தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு…

Read More