பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதில் சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பினும் அதனையும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பாடசாலை மாணவர்களின் புத்தகப்…

Read More

தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்ரல் 1ம் திகதி.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குகள் உயர்நீதிமன்றின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வினால் இன்று (மார்ச் 28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்…

Read More

இலங்கையின் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (மார்ச் 28) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன…

Read More

கண்டியில் குரங்குகளை இடமாற்றும் நடவடிக்கை

கண்டி மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளைப் பிடித்து ஒரு தீவு ஒன்றில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாவட்டத்தில் பயிர்களுக்கு குரங்குகளால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு நேற்று (27) கூடியபோது இந்த முடிவு எட்டப்பட்டது. கண்டி மாவட்டத்தில் வாழும் யானைகளை ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நடுவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் 15 கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டத்திற்கு ஏற்கனவே…

Read More

நுகேகொடையில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

இன்று (மார்ச் 28) நுகேகொடை பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும்இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 111,982 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 90,255 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 64,711 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 48,129 சுற்றுலாப் பயணிகளும் வருகைதந்துள்ளதோடு சீனாவிலிருந்து 37,268 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 41,449 சுற்றுலாப்…

Read More

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் அடுத்த 24 மணித்தியாலத்தில் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்பதால் அது குறித்து அவதானம் செலுத்துமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

மக்கள் இறைமையை மிக கவனமாக உபயோகிக்க வேண்டும் -சுமந்திரன்

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது பிற்போடப்பட்ட தேர்தல். முன்னர் நடந்திருக்க…

Read More

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்….

Read More