“டுபாய் தனுஷ்க”வின் சகாக்கள் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “டுபாய் தனுஷ்க” என்பவரின் சகாக்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 200 கிராம் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

குளியாப்பிட்டிய பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

குளியாப்பிட்டிய – வீரகம பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அவரிடமிருந்து, 287 கிராம் 650 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 168 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் உடுபத்தாவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மட்டக்களப்பு கிரானில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு – கிரான், கருங்காளியடி பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டர் குண்டு ஒன்றை கடந்த 12ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாம்; தற்போது காணி உரிமையாளர்களிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மெகா கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்பு மேற்கொண்டுவருகிறது. குறித்த நடவடிக்கைகளின்போதே, மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More

தெருநாய் அதிகரிப்பால் விபத்துகள்

நாட்டில் தெருநாய்கடி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்  தெருநாய்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகவும்  தேசிய விலங்கு நல நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதன்படி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 250,000 க்கும் மேற்பட்ட நாய்கடி சம்பவங்கள் பதிவாகின்றன என தேசிய விலங்கு நல நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.  இதேவேளை, இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள் இருப்பதாக விலங்கு நல நிறுவன நிர்வாகக் குழுவின் மற்றுமொரு உறுப்பினர்  கிஹான் தினுஷ்கா தெரிவித்துள்ளார். …

Read More

வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது (Absenting from the…

Read More

இஸ்ரேலில் இலங்கையர் உயிரிழப்பு

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த மரணம் குறித்து இஸ்ரேல் பொலிஸின் இன்டர்போல் கிளை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர் இலங்கை அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு முகவரகத்தினூடாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) பதிவாகியுள்ளது. பொகவந்தலாவை – மோரா பகுதியிலுள்ள பெருந்தோட்டப் பயிற்சி நிலையத்தில் செயன்முறைப் பட்டறைக்காக வந்த மாணவர்கள் குழுவே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர் குழுவில் உள்ள 06 மாணவர்கள் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

பதுளை – செங்கலடி வீதியின் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – செங்கலடி வீதியின் மரபாலம் பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாஓயாவிலிருந்து செங்கலடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்துவந்த டிராக்டருடன் மோதியதில், நேற்று வியாழக்கிழமை (13) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.  விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் டிராக்டரின் சாரதி காயமடைந்து கரடியனாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.  இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி;…

Read More

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்

Read More

தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் மருத்துவர்கள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நவம்பர் 17 முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது சுகாதார மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தங்கள் பிரச்சினைகள் எதிர்பார்த்தபடி தீர்க்கப்படாததால், இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து…

Read More