உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்காக போராடும் விவசாயிகளுக்கு தீர்வு

அடுத்த பருவத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ. 220க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூ. 150க்கும் வாங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அப்போது சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 200 ஆகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை ரூ. 300 ஆகவும் அதிகரிக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்மொழிந்து அமைச்சர் இந்த தகவலை…

Read More

நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம்!

விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.  விதை நெற்செய்கைக்கு வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டம் காப்பீடு வழங்குகிறது.  ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு ரூ. 13,600/- தவணை செலுத்துவதன் ஊடாக ஒரு ஏக்கருக்கு…

Read More

345 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு நிலப்பகுதிக்கு மாற்றப்பட்ட 300 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவினர் இன்று (12) அதிகாலையில் கைது செய்தனர். கிரிந்த, அந்தகலவெல்ல கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  திஸ்ஸமஹாராம பகுதிக்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல அவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதன்படி, ஆழ்கடலில்…

Read More

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (12) காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவை கைது செய்யப்பட்டுள்ளார்

Read More

புதிய உள்நாட்டுத் தேனீ கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒன்று சிறிய கொம்புகளைக் கொண்ட புதிய உள்நாட்டுத் தேனீ இனத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த புதிய தேனீ இனமானது ஒரு பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்டிருப்பதால், இதற்கு ‘லூசிஃபர்’ (Lucifer) என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்தத் தனித்துவமான ‘கொம்புகள்’ பெண் தேனீக்களுக்கு மட்டுமே காணப்படுகின்றன.  அதேபோல், இந்த தேனீக்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘லூசிஃபர்’ என்ற பெயர், லத்தீன் மொழியில் “ஒளியைத் தாங்கி வருபவர்” என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது.  இந்த புதிய தேனீ…

Read More

டிஜிட்டல் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட முதலீடுகளுக்கு அடித்தளம் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு  கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), ஆட்பதிவுத் திணைக்களம் (DRP) மற்றும் GovTech (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டங்களின் எதிர்காலச் செயற்பாடுகளை ஆராய்வது, செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் தடைகளை அடையாளம்…

Read More

வருமான இலக்கை எட்டிய இலங்கை சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய (11) தினத்துடன் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது  இது குறித்து சுங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 2,115 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக நேற்றைய தினம் வரை 2,117.2 பில்லியன் ரூபாய் என்ற எல்லையை எட்ட முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More

பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை!

திருகோணமலை முத்துநகர் பகுதியில் பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  இச்சம்பவம் இன்று (11) முத்துநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  சிசு பிறந்து 42 நாட்கள் எனவும் இரவு சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்த தாய் இன்று அதிகாலை சிசுவை பார்த்த போது உயிரிழந்த நிலையில் குழந்தை இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. 

Read More

பெற்றோலிய களஞ்சிய மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பெற்றோலிய உற்பத்திகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக கொலன்னாவை முனையத்தில் தற்போது 30 மற்றும் 31 ஆம் இலக்க எரிபொருள் களஞ்சியத்தின் புதிய தாங்கி மூலம் புனரமைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த பணிகளுக்கு இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியைப் பயன்படுத்தி பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக…

Read More

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டு தற்போது ஐம்பது வருடங்கள் கடந்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் சினிமா தொழிற்றுறைக்குரிய தொழிநுட்பங்களில்…

Read More