போதைப்பொருள் பாவனை உறுதியானால் பணி நீக்கம்.

பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சேவையை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  சேவையை விட்டு வெளியேறிய அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய பொலிஸ் வைத்தியசாலையில் பொருத்தமான பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும்…

Read More

நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 66 வயதுடையவர் கைது.

நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரை பொலிசார் ஓமந்த் பொலீஸ் பிரிவின் சேமமடு பகுதியில் நேற்று (வெப்ரவரி 17) கைது செய்தனர்.. ஓமந்தை பொலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட்ட சோதனையின் போது ஓமந்தையில் வசிக்கும் குறித்த 66 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

10 ரூபாவால் பாணின் விலை குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடுஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ “KRISH” பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகைகள் இன்று (வெப்ரவரி 18) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை உயர் நீதிமன்ற நீதிபதியால் பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவிற்க்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Read More

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வெப்ரவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மின்சார அமைப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வுகளையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கைது.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கடந்த 12 மணித்தியாலத்திற்குள் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, துபாயிலிருந்து இன்று திங்கட்கிழமை (வெப்ரவரி 18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பெண் உட்பட இருவர், சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவந்த 68,000 வெளிநாட்டு சிரட்டுகள் அடங்கிய 340 சிகரட்டு பெட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Read More

பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானம் இன்று எட்டப்படும்.

பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று (வெப்ரவரி 18) எடுக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கிய நிறுவனங்கள் பேக்கரி பொருட்கள் செய்யும் மாவின் விலையை 10ரூபாயால் குறைத்ததன் பின் இந்த தீர்மானத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது சங்க உறுப்பினர்களுடன் விவாதிப்பதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன கூறினார்.

Read More

கிரிக்கட்டில் புதிய சர்ச்சை ஆரம்பம்? – இந்தியநாட்டு கொடி இல்லாமல் காட்சி தரும் கராச்சி மைதானம்.

8 அணிகள் மோதும் 9வது ICC Champions கிண்ண கிரிக்கெட் போட்டி வெப்ரவரி 19ஆம்திகதி பிற்பகல் 2.30க்கு கராச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் நடப்பு செம்பியனான பாகிஸ்தானும் நியூசிலாந்துதும் மோதுகின்றன. இந்தமுறை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா பாக்கிஸ்தான் மோதும் முதல் போட்டி இம்மாதம் 23ம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டிகள் ஆரம்பமாகும்…

Read More

மாணவர்களின் பெறுபேறுகளை நோக்காக கொண்டு அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் நடத்தப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதனால் அவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கிலும், படத்திட்டத்தினை மாணவர்களுக்கு முழுமையாக வழங்கும் நோக்கிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மேலாதிக வகுப்புகளை வடமத்திய மாகாண கல்வித்திணைக்களம் இலவசமாக செயற்படுத்திவருகின்றது. வடமத்திய மாகாண ஆளுநர் திரு. வசந்த ஜினதாச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாகாண ஆளுநர் அலுவலகம், அனுராதபுரம் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவை…

Read More