தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் வருடாந்த Joe-Pete Big Match ஏற்பாடு
கொழும்பு, 25 மார்ச் 2025 – வருடாந்த புனிதர்களின் சமர் என அழைக்கப்படும் 51ஆவது Joe-Pete மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டி தொடர்பில் அறிவிக்கும் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தில் 2025 மார்ச் 25 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் பாடசாலை கிரிக்கட் போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டித் தொடராக கருதப்படும் இந்த போட்டித் தொடரின் இந்த ஆண்டின் போட்டிகள் பற்றிய அறிவிப்பு இதன் போது…

