டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…

பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்ற சம்பவம் குறித்து மேலும் விசாரணை
இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை, நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், குறித்த சம்பவத்தில் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்புபட்டுள்ளார்களா? என்பதனை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுரைத்தது. முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், இந்த வழக்கை…