தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவேண்டும் – வஜிர அபேவர்தன
தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பினால் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் 77 வருடங்களாக நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா முதல் 100 ரூபா வரை இருந்தது. அதனால் மக்களுக்கு வாழ்வது மிகவும் கஷ்டமான நிலை…

