கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா காலமானார்

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக துறையில் நெடுங்காலமாக கோலோச்சிய கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் காலமாகிய செய்தியை அவர் மகன் சியாமலங்கன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவரால் கலைத்துறையில் இன்னுமோர் தளத்திற்குச்சென்றவர்கள் அதிகதிகம். கடந்த சில வருடங்களாக அவுஸ்ரேலியாவில் சுகவீனமுற்று இருந்தவேளையிலும் தனது மாணவர்கள் இலங்கையில் செய்யும் கச்சேரிகளை தொலைத்தொடர்பு மூலம் வழிநடத்தியவர். இவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாககும். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

Read More