தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முறையற்ற காணொளி பகிர்வால், பதவி இழந்த அமெரிக்க நகர முதல்வர்
அமெரிக்காவில் உள்ள ஒரு மாநகர முதல்வர், உள்ளூர் நகர பெண் சட்டத்தரணி ஒருவருக்கு முறையற்ற ரீதியில் வெளிப்படையான காணொளியை அனுப்பிய நிலையில், தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவின் மினோட்டின், பதவி விலகிய முன்னாள் முதல்வரான டேம் ரோஸ் என்பவர், தனது மதிய உணவு இடைவேளையின் போது முறையற்ற காணொளியை தனது நண்பி ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக பெண் சட்டத்தரணி ஸ்டெபானி ஸ்டால்ஹெய்ம் என்பவருக்கு தவறுதலாக அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில், குறித்த தவறினை சுத்தகரித்தபோதும்…

