இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 23 பேர் பலி
காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் ராணுவம் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்றும் இஸ்ரேல் ராணுவம காசா மீது அதிபயங்கர தாக்குதலில் ஈடுபட்டது. காசாவின் ராபா பகுதியை நோக்கி…

