நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்
நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் 100இற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன் எண்ணற்றவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், மேலும் தீவிரமடைந்து வரும் காலநிலையின் சீற்றம் காரணமாக தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையலாம் என கூறப்படுகின்றது. இதற்கிடையில் ஏற்படும் பாதிப்புக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்கும் முகமாகவும் மக்கள் பாதுகாப்பை உறுதி…

