இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது.
துபாயில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் குறித்த பெண் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண்ணின் பயணப் பொதியிலிருந்து 10,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 50 சிகரட்டு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர், பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர்…

