ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

விரைவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்களில் ஒன்றான “WION” செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமரின் விஜயத்துக்கான திகதி உறுதிசெய்யப்படாத நிலையில் ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் இப்பயணம் இடம்பெறலாம் என எதிர்ப்பிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார பின்னணியில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.