The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
ஒடேசாவில் ரஷ்ய தாக்குதல் தீவிரம் – மின்வெட்டு, துறைமுகங்களுக்கு கடும் பாதிப்பு
தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக பரவலான மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கும் கடும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
உக்ரைனின் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, ஒடேசாவை குறிவைத்து ரஷ்யா திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து நடைபெறும் இந்த தாக்குதல்கள், உக்ரேனின் கடல்சார் தளவாடங்கள் மற்றும் கடல் வழித் தொடர்புகளை முடக்குவதற்கான முயற்சியே என ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
டிசம்பர் தொடக்கத்தில் கருங்கடலில் ரஷ்யாவின் “நிழல் கடற்படை” டேங்கர்களை இலக்காகக் கொண்டு உக்ரேன் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதற்கு பதிலடியாக, உக்ரேனின் கடலுக்கான அணுகலை துண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார். மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யா பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான டேங்கர்களே “நிழல் கடற்படை” என அழைக்கப்படுகின்றன.
திங்கட்கிழமை (23) மாலை நடைபெற்ற தாக்குதலில் ஒடேசா துறைமுக உள்கட்டமைப்பு இலக்காக்கப்பட்டதுடன், ஒரு பொதுமக்கள் கப்பலும் சேதமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். இது அண்மைய நாட்களில் நிகழ்ந்த நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் தொடர்ச்சியாகும். இத்தாக்குதல்கள் பல நாட்களாக மின்சார விநியோகத்தை சீர்குலைத்துள்ளதுடன், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களால் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் மின்சாரம் இழந்ததுடன், ஒரு முக்கிய துறைமுகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல மாவு மற்றும் தாவர எண்ணெய் கொள்கலன்கள் அழிந்தன.
கடந்த வாரம் ஒடேசாவின் கிழக்கே உள்ள பிவ்டென்னி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இவ்வார தொடக்கத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில், தனது மூன்று குழந்தைகளுடன் காரில் பயணித்திருந்த ஒரு பெண் உயிரிழந்தார்.
மேலும், உக்ரேன் மற்றும் மொல்டோவாவை இணைக்கும் ஒடேசா பிராந்தியத்தின் ஒரே முக்கிய பாலமும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SuperAceGame8. Pretty dope. Good graphics, smooth gameplay. Check it out if you’re bored superacegame8.