The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத சேவை நாளை முதல் ஆரம்பம் – புகையிரத திணைக்களம்
பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை (24) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் புதன்கிழமை (24) முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை வரை சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
ண்ட இடைவெளிக்குப் பின்னர் யாழ் தேவி புகையிரதம் புதன்கிழமை (24) காலை 06.40 மணியவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி புறப்பட்டு, பகல் 02.32 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது.
அதேபோல் புதன்கிழமை (24) காலை 10.30 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் மாலை 06.54 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளது.
காங்கேசன்துறை – அநுராதபுரம் வரையிலான யாழ்ராணி புகையிரத சேவை திங்கட்கிழமை (22) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடருக்கு பின்னர் குறுகிய காலப்பகுதியில் வடக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை- மட்டக்களப்புக்கான புகையிரத சேவை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Yo, 23winvip is legit! Been hitting some wins there lately. Site’s easy to navigate and the games are pretty fun. Check it out if you’re looking for something new. 23winvip