ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், “இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. இது நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில் அது தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார். இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும்…

Read More

விராட் கோலி ஓய்வு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும், இது குறித்து பிசிசிஐ-யிடம் அவர் தனது முடிவைத் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். தனது மனநிலையை பிசிசிஐ-யிடம் அவர் தெரிவித்திருக்கிறார். அடுத்து சில வாரங்களில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில், பிசிசிஐ அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும்…

Read More

புதிய பாப்பரசர் தேர்விற்கான முதல் வாக்குப்பதிவு நிறைவு

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த வாக்குப்பதிவானது நேற்று (07) இடம்பெற்றிருந்தது. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏறக்குறைய 45,000 மக்கள் புதிய பாப்பரசர் தேர்விற்கான முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருந்த போது, இரவு 9 மணியளவில் (உரோம் உள்ளூர் நேரப்படி) கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டது.

Read More

ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது.மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு முன்பாக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…

Read More

ஈரானில் 2 நகரங்களில் அடுத்தடுத்து வெடி விபத்து

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரின்போது இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரானின் இரண்டு நகரங்களில் இன்று அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஈரானின் மஷ்கத், கியூம் நகரங்களில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மஷ்கத் நகரத்தில் உள்ள பைக் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்…

Read More

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

காஷ்மீர் பகல்காமில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை, எல்லைகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வருகிறது. தற்போது பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய…

Read More

செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் இதனை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி முன்னதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசென்கோ நடத்திய ஏழு மணி நேரத்திற்கும் மேலான முன்னைய சாதனையை 2019 ஒக்டோபரில், உக்ரைனின் தேசிய பதிவு நிறுவனம், ஜெலென்ஸ்கி 14 மணி நேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி முறியடித்திருந்தார். ஆனால் தற்பொழுது 14 மணி நேரம் 54 நிமிடங்கள் பிரார்த்தனைக்காக சுருக்கமான இடைநிறுத்தங்களுடன் மாலைத்தீவு ஜனாதிபதி முகமது…

Read More

IPL இன் இன்றைய முக்கிய இரண்டு போட்டிகள்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் நடைபெறும் குறித்த போட்டியானது, இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் இன்றைய தினத்திற்கான இரண்டாவது போட்டியானது, இரவு 7.30 க்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மருத்துவமனையில் குண்டு வெடிப்பு; 7 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பேன்ஹக் நகரில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

Read More

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட லொக்கு பெட்டி

பெலாரஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான லொக்கு பெட்டி என அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த நபர் அத்துருகிரிய பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 8 ஆம் திகதி க்ளப் வசந்த எனப்படும் வர்த்தகர் வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டு, மேலும் பலரைக் காயமடையச் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக அடையாளம்…

Read More