ஈரானில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் – 14 பேர் உயிரிழப்பு!

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று (26) ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, 750 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தீப்பரவல் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள…

Read More

பஹல்காம் தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமானவர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை….

Read More

ஈரான் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 400 பேர் காயம்

தெற்கு ஈரானின், பந்தர் அப்பாஸ் பகுதியிலுள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று (26) பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  குறித்த சம்பவத்தில் 400ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.  அத்துடன் வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

Read More

கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் மரணம்

மாஸ்கோ அருகே நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவத்தின் மூத்த ஜெனரல்களில் ஒருவரான யுராஸ்லவ் மொகாலிக் கொல்லப்பட்டார். வீட்டருகே அவர் நடந்து செல்லும் பாதையில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை முன்கூட்டியே நிறுத்திவிட்டு, ரிமோட் மூலம் அதை சிலர் வெடிக்கச் செய்துள்ளனர். ரஷ்ய அரசு சார்பில் பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர் யுராஸ்லவ் மொகாலிக். உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்பின் உயர்மட்டக் குழு அதிகாரிகள் புடினை சந்தித்து பேச இருந்த நிலையில், மொகாலிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலையின்…

Read More

பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் இன்று

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில்…

Read More

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 23 பேர் பலி

காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் ராணுவம் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்றும் இஸ்ரேல் ராணுவம காசா மீது அதிபயங்கர தாக்குதலில் ஈடுபட்டது. காசாவின் ராபா பகுதியை நோக்கி…

Read More

பாகிஸ்தானியர்களை 48 மணிநேரத்தில் வெளியேறுமாறு இந்தியா உத்தரவு

பாகிஸ்தானியர் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் சென்றுள்ள…

Read More

மனிதர்கள் பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது….

Read More

நுவரெலியா மலர் கண்காட்சி இன்றும், நாளையும்

நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த கால கொண்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இன்று (18) விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த மலர் கண்காட்சி இன்றும் (18) நாளையும் (19) ஆகிய இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளையும், பார்வையளர்களை மிகுதியாய்…

Read More

கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கஞ்சிபாணி இம்ரான்

போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, வனத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர், சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகைன்’ போதைப்பொரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில்…

Read More