இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
அட்லீ இயக்கவிருக்கும் 6வது படம் 600 கோடி ரூபா பட்ஜெட்டா???
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம் என்ற அது இயக்குனர் சங்கர்தான். அவரோட திரை வீட்டில் இருந்து வந்து இன்று பான் இந்தியா முழுவதும் கலக்கும் இயக்குனர் நாயகன் அட்லீயின் 6வைத்து படத்துக்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 8) வெளியாகி சக்கை போடு போடுது…
புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படங்களின் வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீயுடன் இணையும் படத்தின் அறிவிப்பு தான் இது.அதுவே வழக்கமான பணியில் இருந்து வேறுபாட்டிற்கு. நல்ல இருக்கு வாவ் பீலிங் குடுக்குது.
ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு மட்டும் ரூ. 250 கோடி செலவு என சொல்லப்படுது. இறுக்காதா பின்ன அறிவிப்பு வீடியோவ பாருங்க உங்களுக்கே தெரியும்.
இந்த படத்திற்காக அட்லீக்கு ரூ. 100 கோடி சம்பளம் என்றும் அல்லு அர்ஜுனுக்கு சுமார் ரூ. 175 கோடி சம்பளம் என்றும் சொல்றாங்க.