உலகளாவிய வாகனத் துறையானது, மின்சார வாகனங்களை (EV) நோக்கி வேகமாக நகர்ந்து வரும் வேளையில், விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் நம்பகமான aftersales (விற்பனைக்குப் பின்னரான) சேவைகளுக்கான தேவை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பின்னணியில், இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவை அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அண்மையில் ‘Mercedes-Benz Flying Doctor Service Clinic 2026’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது….
அதிவேக வீதியில் விபத்து இருவர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.