இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
அமெரிக்காவில் பிரவுன் பல்கலைகழகத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில், சனிக்கிழமை (13) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கறுப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிதாரியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கட்டிடத்தில் யார் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாக பிராவிடன்ஸ் பொலிஸ் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.
“நினைக்க முடியாதது நடந்தது,” என்று சோகமான ரோட் தீவு ஆளுநர் டான் மெக்கீ இதன்போது அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.


The XOSO66APP is smooth as butter. I hate laggy gambling apps. This one’s great for making quick bets during the game. Give it a try if you’re on mobile. Worth downloading. xoso66app