Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
இந்திய பிரதமரின் வருகையும் , இலங்கையில் உருவான பேசுபொருளும்.
இந்திய பிரதமர் மோடியின் இலங்கை வருகைக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட சர்ச்சைகளையடுத்து, பதாகையின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட வடிவமைப்பை தனது Facebook கணக்கிலும் பகிர்ந்துள்ளார்.
இந்த மாற்றம், டிஜிட்டல் வடிவமைப்பில் மாத்திரமா அல்லது கொழும்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளிலும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இதற்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 07.25 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்த நிலையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதிலும் தற்போது மக்களுக்கு விசனம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு என்பது முக்கியமான ஒரு விடயம் தான். அனால் விதிகளை மூடி மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்குவது எவ்வகையில் ஞாயமாகும் என பொதுமக்கள் தங்கள் விசனத்தை தெரிவிக்கின்றனர்.
தனது பாதுகாப்பு காவலர்களை குறைத்தமை, மேலதிக பாதுகாப்பு வண்டிகளை வேண்டாம் என்றமை, தனது கார் கதவினை தானே திறந்தமை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் பிறநாட்டு அரசியல்வாதிகளுக்காக விதிகளை மூடுவது, மாற்று விதிகளை பயன்படுத்த கோருவது வேடிக்கையாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவுகளை இட்டு விமர்சிக்கின்றார்கள்.
ஆனால் பிறிதோர் நாட்டில் இருந்து முக்கிய அரசியல் புள்ளிகள் வேறொரு நாட்டிற்கு உத்தியாகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்போது. அந்த அரசியல் புள்ளியின் பாதுகாப்பு வீரர்கள் முன்னதாகவே அவர் வியாஜம் மேற்கொள்ளும் நாட்டிற்கு சென்று பாதுகாப்புகளை உறுதிப்படுத்தி, சில கோரிக்கைகளை அந்நாட்டு அரசாங்கத்திடம் முன்வைப்பார்கள். அவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக இவை இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.