இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
உப்பு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பேக்கரி உற்பத்திகள்
உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில், உப்பு பிரச்சினை குறித்து அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. நாங்கள் அமைச்சருக்கும் இது குறித்து அறிவித்திருக்கிறோம். அமைச்சர் தேவையான அளவு உப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதற்காக காத்திருக்கிறோம். ஏனெனில், பேக்கரிகளுக்கு உப்பு கட்டிகள் தேவையில்லை, பெரும்பாலும் உப்பு தூள் பயன்படுத்தப்படுகிறது. உப்பு தூளில் தான் தட்டுப்பாடு உள்ளது. பேக்கரி பொருட்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு தூள் தேவைப்படுகிறது. அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.”

