JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(ஏப்ரல் 07) இரவு வாயு நிரப்புவதற்காக வந்த லொறி ஒன்றுக்கு வாயு நிரப்பும் போது, 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயு தொட்டிகளில் ஒன்று வெடித்ததால் இந்த தீ ஏற்பட்டுள்ளது.
வெடிக்காத மற்றொரு 6,000 லீற்றர் வாயு தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.