JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில் 9ஆவது புதிய காட்சியறை திறப்பு
உலகின் முன்னணி புதிய சக்தி வாகன (NEV) உற்பத்தியாளரான BYD, இலங்கையிலுள்ள தனது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஓட்டோ நிறுவனத்துடன் இணைந்து, கிழக்கு மாகாணத்தில் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மட்டக்களப்பில் தனது 9ஆவது காட்சியறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை வீதி, இலக்கம் 556 D எனும் முகவரியில் அமைந்துள்ள Harry Traders நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் இப்புதிய BYD காட்சியறையானது, கொழும்பு, காலி, குருணாகல், கண்டி, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகிய நகரங்களை உள்ளடக்கிய BYD-இன் விரிவடைந்து வரும் விற்பனை மற்றும் சேவை வலையமைப்பில் இணைந்துள்ளது. இப்புதிய காட்சியறையின் திறப்பு, கிழக்கு மாகாணத்தில் BYD-இன் இருப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட மின்சார மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களை இலகுவாகக் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் காட்சியறையாக செயல்படவுள்ள இந்நிலையத்தில், விரைவில் வாடிக்கையாளர்களுக்கான பழுதுபார்ப்புச் சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் வழங்கும் வசதிகளையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு BYD SEALION 5, BYD SEALION 6, BYD SEALION 8, BYD ATTO 1, BYD ATTO 2 மற்றும் BYD DOLPHIN ஆகிய முன்னணி வாகன மாதிரிகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இது குறித்து JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் திறக்கும் ஒவ்வொரு புதிய காட்சியறையும், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் புதிய சக்தி போக்குவரத்தைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதற்கான சான்றாகும். மட்டக்களப்பு அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். Harry Traders நிறுவனத்துடனான இக்கூட்டாண்மையின் மூலம் BYD-இன் உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை அப்பகுதி மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்ப்பதில் பெருமையடைகிறோம்,” என்றார்.
இந்த நிலையில், Harry Traders நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தவபாலன் ஹரி பிரதாப் கருத்து தெரிவிக்கையில், “மட்டக்களப்பில் BYD நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், இலங்கையர்களின் வாகனப் பயன்பாட்டு கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதிலும் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். புதுமைக்கும் தரம் வாய்ந்த சேவைகளுக்கும் கிழக்கு மாகாணத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே, எமது மக்களுக்கு ஒரு புதிய பயண அனுபவத்தை அறிமுகப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், ஜோன் கீல்ஸ் நிறுவனம் GreenEV நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் 46 வேகமான சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. மேலும் GreenEV உடனான அண்மைய மூலோபாயக் கூட்டாண்மை மூலம் மேலதிகமாக 83 சார்ஜர்களைப் பயன்படுத்த முடிவதோடு, தற்போது நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் மொத்தம் 129 பொதுச் சார்ஜிங் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர, BYD மற்றும் DENZA வாகனங்களை விலைக்கு வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வீடுகளிலேயே பயன்படுத்தக்கூடிய சார்ஜர் (Home charger) இலவசமாக வழங்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் தனது புதிய காட்சியறையைத் திறந்துள்ளதன் மூலம், BYD நிறுவனம் இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவை வசதிகளை விரிவுபடுத்துவதுடன், புதிய சக்தி வாகனங்களுக்கான அணுகலையும் மேலும் அதிகரித்துள்ளது. மேல், தென், மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் தனது விற்பனை மற்றும் சேவை நிலையங்களை விரிவுபடுத்தியுள்ள BYD மற்றும் JKCG Auto ஆகிய நிறுவனங்கள், இலங்கையில் பசுமைப் போக்குவரத்துக்கான மாற்றத்தை வெறும் சாத்தியமான ஒன்றாக மட்டுமன்றி, ஒவ்வொரு இலங்கையருக்கும் இலகுவானதாகவும் வசதியானதாகவும் மாற்றுவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றன.
Best Jili games I’ve played in a while. The graphics are crisp and the wins feel rewarding. Big shoutout to 178jilicasino for the top tier service.
If you are looking for a place with a huge range of betting options, this is it. Very transparent and easy to navigate. Visit miliarbetlogin.
The deposit and withdrawal process here is a breeze. I love how quickly my funds hit the account. Great experience so far with krskrillcasino.
I’ve been looking for a reliable way to access my account and this site makes it so simple. The login process is smooth and I didn’t hit any glitches. Highly recommend popi99login for everyone.
Everything is just seamless here. From the registration to the actual gameplay, it is a breeze. Cheers to vs888link
Quick deposits and even quicker withdrawals. That is all I care about and this site nails it perfectly. Go check z777gamelogin right now.
I’ve tried a few platforms recently but this one really stands out for its smooth interface. Definitely my new favorite spot to hang out and play. Check out vn1888vcom