ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ்…
குளியாப்பிட்டிய பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
குளியாப்பிட்டிய – வீரகம பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அவரிடமிருந்து, 287 கிராம் 650 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 168 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் உடுபத்தாவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

