Homegrown finance company Siyapatha Finance PLC successfully unveiled its 65th branch in Chunnakam, Jaffna, further strengthening the Company’s presence in the Northern region of Sri Lanka. The branch was declared open by Siyapatha Finance PLC Chief Executive Officer (CEO) Mr. Mathisha Hewavitharana, in the presence of Chief Operating Officer (COO) Mr. Rajeev De Silva, Ms.P.Shanmugapriya,…
கொழும்பில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டம்
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தற்போதைய அரசாங்கம் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (ஏப்ரல் 03) நடைபெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது ஜனநாயக ரீதியான பேசும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே.
ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது 27 பேரை கைது செய்துள்ளதுடன் இதுவரைக்கும் பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அப்படியென்றால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேசும் உரிமை இல்லையா?, போராடும் உரிமை இல்லையா? என வினவினார்.
அதனோடு தற்போதைய அரசாங்கத்திற்கு உறுதியாக ஒன்றை சொல்கின்றோம். இந்த அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.