Landmark 1,000th vehicle delivery reflects growing customer confidence in Hayleys Mobility’s future-ready mobility solutions Hayleys Mobility Limited, the mobility segment of Hayleys Fentons Limited, has marked the delivery of its 1,000th vehicle, a milestone achieved within its first 9 months of operation and a clear reflection of the trust Sri Lankan motorists have placed in…
சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்களை தேநீர்விருந்து நிகழ்வில் கௌரவித்த KALBE நிறுவனம்
KALBE நிறுவனம் தனது முன்னணி ஊட்டச்சத்து பிராண்டான Diabetasol ஊடாக, 2026 மார்ச் 27 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு City of Dreamsஇல் உள்ள Cinnamon LifeCelestine Ballroom Diabetasol தேநீர் விருந்து நிகழ்வை நடத்தியது.
இந்த நிகழ்வில் 50 நம்பிக்கைக்குரியDiabetasol வாடிக்கையாளர்களும், முன்னணி ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்தனர். நீரிழிவு நோய் கண்டறியப்படுவது என்பது முழுமையான, சுறுசுறுப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் முடிவல்ல; மாறாக, அது விழிப்புணர்வுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கான ஒரு புதிய தொடக்கமாகும் என்ற செய்தியை வலியுறுத்துவதை இந்த மாலை நேர நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.
“நீரிழிவு நோயுடன் செழிப்பான வாழ்வு“ (Thriving with Diabetes) எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்த நிகழ்வு, சர்க்கரை நோய் பற்றிய பொதுவான தூரநோக்குப் பார்வையை மாற்றும் நோக்கில் நடத்தப்பட்டது. இது கட்டுப்பாடுகள் மற்றும் சமரசங்கள் குறித்த உரையாடலைத் தவிர்த்து, விழிப்புணர்வு, கல்வி மற்றும் கொண்டாட்டம் சார்ந்ததாக மாற்றியது. நீரிழிவு நோயை நிர்வகிப்பது என்பது உணவின் சுவையை ரசிப்பதையோ அல்லது மற்றவர்களுடன் இணைந்து பழகுவதையோ கைவிடுவது அல்ல என்பதை விருந்தினர்கள் இந்த நிகழ்வின் மூலம் உணர்ந்தனர்.
இந்த மாலை நேரத்தின் முக்கிய சிறப்பம்சமாக ‘சமநிலையான வாழ்க்கை: ஊட்டச்சத்து, நேர்மறையான மனநிலை மற்றும் மகிழ்ச்சியான முறையில் சுறுசுறுப்பாக இருத்தல்’ என்ற தலைப்பில் ஒரு நிபுணர் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் குழுவில் இரண்டு நிபுணர்கள் பங்கேற்றனர். அவர்கள் நீரிழிவு நோயுடன் வாழ்வதன் மருத்துவ ரீதியான மற்றும் ஆழமான தனிப்பட்ட அனுபவங்கள் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
Heracle Care & Wellness நிறுவனத்தின் சிரேஷ்ட ஊட்டச்சத்து நிபுணரும் பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணருமான திருமதி. பரமி வீரசிங்க, இரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பதற்கான ஊட்டச்சத்து அடிப்படைகள் குறித்து விளக்கமளித்தார். சர்க்கரை மற்றும் இனிப்பூட்டிகள் (sweeteners) குறித்த பொதுவான தவறான கருத்துக்களை அவர் தெளிவுபடுத்தியதோடு, அன்றாட வாழ்வில் குறைந்த low-glycemic index கொண்ட உணவுகளின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். மேலும், உணவுப் பொருட்களின் லேபிள்களைப் படிப்பதற்கும், உணவின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் நடைமுறை உத்திகளை அவர் வழங்கினார்.
இதனை நிறைவு செய்யும் வகையில், மனநல ஆலோசகரும் பேச்சாளருமான திருமதி. அஞ்சலி புதவத்த ஜயவர்தன, நீரிழிவு நோய் தொடர்பான உரையாடல்களில் பெரும்பாலும் விடுபட்டுப்போகும் ஒரு முக்கிய விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்: அதாவது, நீண்டகால நோயை நிர்வகிப்பதில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் உளவியல் ரீதியான தாக்கம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உணவு மற்றும் மருந்து எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மனநிலை, அன்றாட நடைமுறைகள் மற்றும் சமூக ஆதரவும் மிக முக்கியம் என்பதை இந்த விவாதம் ஆராய்ந்தது.
நீரிழிவு நோயைச் சரியாகக் கையாள்வது என்பது உடல் ரீதியான ஒழுக்கத்தைப் போலவே மன ரீதியான ஒழுக்கமும் சம்பந்தப்பட்டது. உணர்ச்சி நலம் மற்றும் இரத்த சர்க்கரை நிர்வகிப்பு ஆகிய இரண்டும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை நோயாளிகள் புரிந்துகொள்ளும்போது, அதன் முடிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறது,” என ஆலோசனை உளவியலாளர் அஞ்சலி புதவத்த ஜயவர்தன கூறினார்.
ஆரோக்கியமான சமையல் கலைகளில் நிபுணத்துவம் பெற்ற விருந்தினர் சமையல் கலைஞர் திருமதி. நதி அமரசிங்க, நேரடி சமையல் விளக்கத்தின் மூலம் Diabetasol தயாரிப்பை அன்றாட உணவுகளில் எவ்வாறு எளிதாகவும் சுவையாகவும் சேர்க்கலாம் என்பதைச் செய்துகாட்டினார். எளிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், முறையான தயாரிப்பின் மூலமும், நீரிழிவு நோயாளிகளுக்கான உணவை உண்மையிலேயே ஒரு சிறந்த அனுபவமாக மாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்தார். நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு சுவையற்றதாகவோ அல்லது மகிழ்ச்சியற்றதாகவோ தான் இருக்க வேண்டும் என்ற பொதுவான தவறான கருத்தை அவர் இதன் மூலம் உடைத்தெறிந்தார்.
இந்த நிகழ்வின் மிகவும் மறக்கமுடியாத மற்றும் உற்சாகமான தருணங்களில் ஒன்றாக, அங்கிருந்த அனைத்து விசுவாசமான Diabetasol வாடிக்கையாளர்களும் ஒரு நேரடி நடன சிகிச்சை (Dance Therapy) அமர்வில் கலந்துகொண்டனர். இதனை Shadow Dance Academy நிறுவனரும், ஆரோக்கியத்திற்கான நடன சிகிச்சையில் நிபுணருமான நிலக்ஷ பிரசாத் வழிநடத்தினார். நடன சிகிச்சை என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாகும்: வழக்கமான தாள இயக்கங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன, மேலும் மனநிலை மற்றும் மனநலத்திற்கு கணிசமான நன்மைகளை வழங்குகின்றன.
Diabetasol உயர் தேநீர் விருந்து திட்டம் என்பது, இந்த பிராண்டை தங்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்ட ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நாங்கள் சொல்லும் ஒரு நன்றிக்கடன்: நாங்கள் உங்களைக் கவனிக்கிறோம், உங்களை மதிக்கிறோம், மேலும் இந்தப் பயணத்தில் உங்களுடன் இணைந்து பயணிக்க உறுதியாக இருக்கிறோம். நீரிழிவு நோயுடன் சிறப்பாக வாழ்வது சாத்தியம் என்பது மட்டுமல்ல, அது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதற்கும் இன்றைய தினமே சாட்சி” என்று KALBE நிறுவனத்தின் ஊட்டச்சத்து வணிகப் பிரிவின் தலைவர் கிஷன் கனகசபை தெரிவித்தார்.
ஒவ்வொரு நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளரும் எழுந்து நின்று, இணைந்து நடனமாடியது இந்த நிகழ்வின் கருப்பொருளைக் காட்சிப்படுத்தும் ஒரு வலிமையான தருணமாக அமைந்தது: அதாவது, நீரிழிவு நோயுடன் வாழ்வது என்பது முடங்கிப் போவதல்ல. அந்த அறையில் நிலவிய ஆற்றல் அபாரமாக இருந்தது. மேலும், இந்த அமர்வானது வெறும் நோயை மட்டும் கவனிக்காமல், ஒரு மனிதரின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதில் KALBE நிறுவனம் கொண்டுள்ள உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Diabetasol தொடர்பாக
Diabetasol என்பது KALBE நிறுவனத்தால் நீரிழிவு நோயாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு ஊட்டச்சத்து பானமாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான வலிமையையும் நீடித்த ஆற்றலையும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது; அதேவேளை, இது இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தவிர்க்கிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low GI) மற்றும் மெதுவாகச் செரிமானமாகும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள Diabetasol, உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதோடு இரத்த சர்க்கரை அளவைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பொதுவான ஊட்டச்சத்து பானங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும் அவை இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும்; ஆனால், அதற்கு மாறாக Diabetasol நீரிழிவு நோயாளிகளின் தனித்துவமான உணவுத் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரியான ஊட்டச்சத்துக்களின் சமநிலையைக் கொண்டுள்ள Diabetasol, தனிநபர்கள் சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ வழிவகை செய்கிறது. இது அவர்களது உடல்நிலைக்கு எதிராகச் செயல்படாமல், ஆரோக்கியத்திற்குத் துணையாக நின்று ஊட்டச்சத்தை வழங்குகிறது.
KALBE தொடர்பாக
தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி மருந்து மற்றும் நுகர்வோர் சுகாதார நிறுவனங்களில் ஒன்றான KALBE நிறுவனத்தின் ஒரு அங்கமே KALBE Lanka ஆகும். புத்தாக்கமான சுகாதார தயாரிப்புகள், ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு மூலம் நோயாளிகள் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் உறுதியுடன் உள்ளது.
KALBE International என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ASEAN) பொதுப்பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய சுகாதார நிறுவனமான Kalbe Group ஒரு அங்கமாகும். புத்தாக்கமான சுகாதார தீர்வுகள், ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் உறுதியுடன் உள்ளது.
KALBE நிறுவனம் ஆரோக்கியத்திற்கான தனது 60 ஆண்டு கால அர்ப்பணிப்பைக் கொண்டாடும் இவ்வேளையில், Diabetasol உடன் இணைந்து ஒரு உன்னதமான நோக்கத்திற்காக நிற்கிறது. அதாவது, நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட பின்னரும் மக்கள் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு இந்நிறுவனம் உறுதுணையாக இருக்கிறது.